மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டசிறப்பு முகாமை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

Published Date: September 3, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டசிறப்பு முகாமை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். 

பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். 

மதுரை மாநகராட்சியை பொருத்தவரை வாரந்தோறும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டில் 21,22 ஆகிய  இரு வார்டு பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருள்தாஸ்புரம் பெரியசாமி பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் இந்த முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

முன்னதாக மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மண்டலம் மூன்றில், 55வது வார்டு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதில் மாநகராட்சி மேயர் வ.இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன், தலைமை பொறியாளர் பாபு, உதவி ஆணையாளர் பிரபாகரன், ரவிக்குமார்,  நிர்வாக அலுவலர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் முத்து காமராஜர், உதவி பொறியாளர்கள் கனி, வீரபரணிதாஸ், ஸ்டீபன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Media: Dinamani